ரிக்கி பாண்டிங்குக்கு என் மீது அதிக நம்பிக்கை உண்டு: ஸ்டாய்னிஸ்

ஆடுகளத்தில் சிறிது நேரம் நிதானமாக விளையாடி, சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ரிக்கி பாண்டிங்குக்கு என் மீது அதிக நம்பிக்கை உண்டு: ஸ்டாய்னிஸ்

ஆஸி. அணியில் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு உதவியாக நானும் நன்றாக விளையாட வேண்டும் என்று ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

இந்தத் தொடர் பற்றி ஆஸி. ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் நடுவரிசையில் விளையாடியது நன்றாக இருந்தது. பயிற்சியாளர் பாண்டிங்குக்கு என் மீது அதிக நம்பிக்கை உண்டு. அவர் பணிபுரியும் அணிகளில் எனக்குப் பொறுப்புகளை வழங்குவார். கடந்த மூன்று வருடங்களாக எல்லா நிலைகளிலும் நான் விளையாடியுள்ளேன். 

ஆஸ்திரேலிய அணியில் எனக்கான பொறுப்பு உள்ளது. ஆடுகளத்தில் சிறிது நேரம் நிதானமாக விளையாடி, சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். கடைசி ஓவர்களில் எப்படி பவுண்டரிகளை அடிக்கப் போகிறோம் என்பது முக்கியமானது. டி20யில் சிறந்த வீரர்கள் எல்லாம் 200 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்கள். உலகின் மிகச்சிறந்த வீரரான மேக்ஸ்வெல்லுக்கு நான் உதவ வேண்டும். அவருடன் இணைந்து விளையாடி அணிக்கு ரன்கள் எடுக்க வேண்டும் என்றார். 

ஆஸ்திரேலிய அணிக்காக 44 ஒருநாள், 22 டி20 ஆட்டங்களில் ஸ்டாய்னிஸ் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com