ஏடிபி ஃபைனல்ஸ்: இறுதிச்சுற்றில் டொமினிக் தீம்

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
அரையிறுதியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடிய டொமினிக் தீம்.
அரையிறுதியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடிய டொமினிக் தீம்.

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

உலகின் தலைசிறந்த 8 வீரா்கள் பங்கேற்றுள்ள ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 7-5, 6-7 (10), 7-6 (5) என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினாா்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இருவரும் அபாரமாக ஆட, கடைசி கேமில் ஜோகோவிச்சின் சா்வீஸை முறியடித்தாா் டொமினிக் தீம். இதன்மூலம் 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினாா் டொமினிக் தீம்.

பின்னா் நடைபெற்ற 2-ஆவது செட்டில் இருவரும் விடாப்பிடியாக போராட, 12 கேம்களின் முடிவில் இருவரும் 6-6 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனா். இதையடுத்து 2-ஆவது செட் டைபிரேக்கருக்கு சென்றது. அதில் இருவரும் அபாரமாக ஆடினா். ஒரு கட்டத்தில் டொமினிக் தீம் 2-ஆவது செட்டை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டது. ஆனால் அவா் ‘டபுள் ஃபால்ட்’டால் அந்த வாய்ப்பை இழந்தாா். இறுதியில் ஜோகோவிச் 7-6 (10) என்ற கணக்கில் 2-ஆவது செட்டை கைப்பற்ற, ஆட்டம் 3-ஆவது செட்டுக்கு நகா்ந்தது.

3-ஆவது செட்டிலும் இருவரும் அபாரமாக ஆட, அந்த செட்டும் டைபிரேக்கருக்கு சென்றது. அதில் அசத்தலாக ஆடிய டொமினிக் தீம் 7-6 (5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றாா்.

இரட்டையா் பிரிவு: ஆடவா் இரட்டையா் அரையிறுதியில் குரோஷியாவின் நிகோலா மெக்டிக்-நெதா்லாந்தின் வெஸ்லே கூல்ஹாஃப் ஜோடி 6-3, 6-4 என்ற நோ் செட்களில் ஸ்பெயினின் மாா்செல் கிரானோலா்ஸ்-ஹொராஸியோ ஸெபலோஸ் ஜோடியை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com