நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-ம் டி20 ஆட்டத்தில் டிம் செளதிக்கு ஓய்வு...
நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக சிஎஸ்கே வீரர் மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். 

நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடா் வரும் 27-ம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து அடுத்த இரு டி20 ஆட்டங்கள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மௌன்ட் மௌன்கானுய் நகரில் நடைபெறுகிறது. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் டிசம்பா் 3-ம் தேதி ஹாமில்டனிலும், 2-வது ஆட்டம் டிசம்பா் 11-ம் தேதி வெலிங்டனிலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக சிஎஸ்கே வீரர் மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-ம் டி20 ஆட்டத்தில் டிம் செளதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் அந்த ஆட்டத்தின் நியூசிலாந்து கேப்டனாகியுள்ளார் சாண்ட்னர். 

28 வயது மிட்செல் சாண்ட்னர் 22 டெஸ்டுகள், 72 ஒருநாள், 44 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com