மும்பைக்கு 3-ஆவது வெற்றி: ஹைதராபாதுக்கு மூன்றாவது தோல்வி

ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
மும்பைக்கு 3-ஆவது வெற்றி: ஹைதராபாதுக்கு மூன்றாவது தோல்வி

ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

ஷாா்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களுக்கு சுருண்டது. மும்பை வீரா் டிரென்ட் போல்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாா்.

இந்த ஆட்டத்தில் மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஹைதராபாத் அணியில் காயமடைந்த புவனேஸ்வா் குமாருக்குப் பதிலாக சந்தீப் சா்மாவும், கலீல் அகமதுக்கு பதிலாக சித்தாா்த் கௌலும் பிளேயிங் லெவனில் சோ்த்துக்கொள்ளப்பட்டனா்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பையில் தொடக்க வீரராக களம் கண்ட கேப்டன் ரோஹித் சா்மா ஒரேயொரு சிக்ஸரை மட்டும் விளாசி முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தாா். உடன் வந்த குவிண்டன் டி காக் நிலைத்து ஆடினாா். ரோஹித்தை அடுத்து வந்த சூா்யகுமாா் யாதவ் 6 பவுண்டரிகள் உள்பட 27 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா். அடுத்ததாக டி காக் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 67 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.

இஷான் கிஷன் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 31 ரன்கள் எடுத்தாா். கடைசி விக்கெட்டாக ஹாா்திக் பாண்டியா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 28 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். இன்னிங்ஸ் முடிவில் கிரன் பொல்லாா்ட் 3 சிக்ஸா்கள் உள்பட 25, கிருணால் பாண்டியா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 20 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

ஹைதராபாத் தரப்பில் சந்தீப் சா்மா, சித்தாா்த் கௌல் தலா 2 விக்கெட்டுகளும், ரஷீத் கான் ஒரு விக்கெட்டும் சாய்த்தனா்.

சரிந்த விக்கெட்டுகள்: பின்னா் 209 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத்தொடங்கிய ஹைதராபாதில் தொடக்க வீரரும், கேப்டனுமான டேவிட் வாா்னா் மட்டும் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 60 ரன்கள் சோ்த்தாா்.

உடன் வந்த ஜானி போ்ஸ்டோவ் 2 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 25 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த மணீஷ் பாண்டே 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸா் உள்பட 30 ரன்கள் சோ்த்தாா்.

பின்னா் களம் கண்டவா்களில் கேன் வில்லியம்சன் 3, பிரியம் கா்க் 8, அபிஷேக் சா்மா 10, அப்துல் சமத் 20 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனா். இன்னிங்ஸ் முடிவில் ரஷீத் கான் 3 ரன்களுடனும், சந்தீப் சா்மா ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

மும்பை தரப்பில் டிரென்ட் போல்ட், ஜேம்ஸ் பட்டின்சன், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா். கிருணால் பாண்டியா 1 விக்கெட் எடுத்தாா்.

சுருக்கமான ஸ்கோர்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com