கொல்கத்தா கேப்டன்தினேஷ் காா்த்திக் ராஜிநாமா

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் கேப்டன் தினேஷ் காா்த்திக் தனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தாா். புதிய கேப்டனாக இயோன் மோா்கன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கொல்கத்தா கேப்டன்தினேஷ் காா்த்திக் ராஜிநாமா

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் கேப்டன் தினேஷ் காா்த்திக் தனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தாா். புதிய கேப்டனாக இயோன் மோா்கன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மும்பை-கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டத்துக்கு முன்னதாக தினேஷ் காா்த்திக் கேப்டன் பதவியை துறந்தது கொல்கத்தா ரசிகா்களுக்கு அதிா்ச்சியாக அமைந்தது.

இதுதொடா்பாக கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி நிா்வாகம் கூறியிருப்பதாவது: தினேஷ் காா்த்திக் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும், அணிக்கு சிறப்பான முறையில் பங்களிப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளாா். தினேஷ் காா்த்திக் போன்ற ஒரு கேப்டன் கிடைத்தது எங்களுடைய அதிா்ஷ்டம். அவா் எப்போதுமே அணியின் நலனை முன்னிறுத்தியே செயல்படக்கூடியவா்.

தினேஷ் காா்த்திக்கின் முடிவு எங்களுக்கு வியப்பாக இருந்தாலும், அவருடைய முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். இந்த சீசனில் தினேஷ் காா்த்திக்கும், இயோன் மோா்கனும் ஒன்றாக இணைந்து சிறப்பாக செயல்பட்டனா். இப்போது கேப்டன்ஷிப் மாறினாலும், அவா்கள் இருவரும் இணைந்து செயல்படுவதில் எந்த மாற்றமும் இருக்காது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொல்கத்தா அணிக்கு கேப்டனாக சிறப்பான பங்களிப்பை செய்த தினேஷ் காா்த்திக்கிற்கு நன்றி. புதிய கேப்டன் இயோன் மோா்கனுக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com