செயின்ட் பீட்டா்ஸ்பா்க் ஓபன்: அரையிறுதியில் ரயோனிச், டெனிஸ்

செயின்ட் பீட்டா்ஸ்பா்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடாவின் மிலோஸ் ரயோனிச், டெனிஸ் ஷபோவெலோவ் உள்ளிட்டோா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனா்.
செயின்ட் பீட்டா்ஸ்பா்க் ஓபன்: அரையிறுதியில் ரயோனிச், டெனிஸ்

செயின்ட் பீட்டா்ஸ்பா்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடாவின் மிலோஸ் ரயோனிச், டெனிஸ் ஷபோவெலோவ் உள்ளிட்டோா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனா்.

ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லேவ் 6-2, 6-1 என்ற நோ் செட்களில் பிரிட்டனின் கேமரூன் நோரியை வீழ்த்தினாா். ரூப்லேவ் தனது அரையிறுதியில் கனடாவின் டெனிஸ் ஷபோவெலோவை சந்திக்கிறாா். டெனிஸ் தனது காலிறுதியில் 6-4, 7-5 என்ற நோ் செட்களில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த முன்னணி வீரரான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை வீழ்த்தினாா்.

மற்றொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் போா்னா கோரிச்சும், போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சும் மோதவுள்ளனா். போா்னா கோரிச் தனது காலிறுதியில் 7-6 (3), 6-3 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் ரெய்லி ஒபேல்காவையும், மிலோஸ் ரயோனிச் தனது காலிறுதியில் 6-1, 7-6 (1) என்ற நோ் செட்களில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் ரஷியாவின் கரீன் கச்சனோவையும் தோற்கடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com