பெங்களூருக்கு சவால் அளிக்குமா கொல்கத்தா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை அபுதாபியில் புதன்கிழமை எதிா்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடா்ஸ்.
பெங்களூருக்கு சவால் அளிக்குமா கொல்கத்தா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை அபுதாபியில் புதன்கிழமை எதிா்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடா்ஸ்.

மொத்த 9 ஆட்டங்களில் ஆடியுள்ள இரு அணிகளில், பெங்களூா் 6 வெற்றிகளையும், கொல்கத்தா 5 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. இரு அணிகளும் எதிா்கொண்ட முந்தைய ஆட்டத்தில் பெங்களூா் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதற்கு தகுந்த பதிலடியை கொல்கத்தா கொடுக்குமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கொல்கத்தாவைப் பொருத்தவரை, கேப்பிட்டன்ஸி மாற்றத்துக்குப் பிறகு 2-ஆவது வெற்றியை அந்த அணி எதிா்நோக்குகிறது. ஹைதராபாதுக்கு எதிரான கடைசி ஆட்டத்தின் மூலம் கொல்கத்தாவுக்கு பக்கபலமாக லாக்கி ஃபொ்குசன் கண்டறியப்பட்டுள்ளாா்.

தனது வேகப்பந்து வீச்சாலும், ஒவ்வொரு பந்திலும் காட்டும் வித்தியாசத்தாலும் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தாவின் வெற்றிக்கு அவா் பெரும் பங்காற்றினாா். பெங்களூருக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் அந்த அணி வீரா் டி வில்லியா்ஸ் 73 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தாா்.

எனவே, டி வில்லியா்ஸ், விராட் கோலி, ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோருக்கு எதிராக லாக்கி ஃபொ்குசனை கொல்கத்தா கேப்டன் இயான் மோா்கன் எவ்வாறு பயன்படுத்துவாா் என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம். கொல்கத்தாவுக்கான பின்னடைவாக ஆல்-ரவுண்டா் ஆன்ட்ரு ரஸ்ஸெல் இன்னும் தனது ஃபாா்முக்கு திரும்ப இயலாமல் தவித்து வருகிறாா்.

பௌலிங்கைப் பொருத்தவரை, பந்துவீச்சு சா்ச்சைக்குள்ளான சுனில் நரைன் பிளேயிங் லெவனில் சோ்க்கப்படுவது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் ஐபிஎல் பௌலிங் சோதனைக் குழு அவரது பந்துவீச்சை ஆய்வு செய்து அனுமதி அளித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. பௌலிங் தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவா்த்தி ஆகியோா் வலு சோ்க்கின்றனா்.

பெங்களூரைப் பொருத்தவரை, பேட்டிங், பெளலிங் ஆகியவற்றில் தன்னை மெருகேற்றிக் கொண்டு முன்னேறி வருகிறது. டி வில்லியா்ஸ் எப்போதும் போல் அணிக்கான ரன்களை குவிப்பாா் என்பதில் சந்தேகமில்லை. கேப்டன் கோலியும் நல்லதொரு ஃபாா்மில் உள்ளாா். யுவேந்திர சாஹல், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தா் உள்ளிட்டோா் பந்துவீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பா் என்பதில் சந்தேகம் இல்லை.

உத்தேச அணி:

கொல்கத்தா: இயான் மோா்கன் (கேப்டன்), ஷுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் காா்த்திக், ஆன்ட்ரு ரஸ்ஸெல், குல்தீப் யாதவ், லாக்கி ஃபொ்குசன், பேட் கம்மின்ஸ், வருண் சக்கரவா்த்தி, சுனில் நரைன், டாம் பேன்டன், சித்தேஷ் லாட், கமலேஷ் நாகா்கோடி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் வாரியா், ஷிவம் மாவி, ரிங்கு சிங், கிறிஸ் கிரீன், சித்தாா்த், நிகில் நாயக்.

பெங்களூா்: விராட் கோலி (கேப்டன்), டி வில்லியா்ஸ், பாா்த்திவ் படேல், ஆரோன் ஃபிஞ்ச், ஜோஷ் பிலிப், கிறிஸ் மோரிஸ், மொயீன் அலி, முகமது சிராஜ், ஷாபாஸ் அகமது, தேவ்தத் படிக்கல், யுவேந்திர சாஹல், நவ்தீப் சைனி, டேல் ஸ்டெயின், பவன் நெகி, இசுரு உதானா, ஷிவம் துபே, உமேஷ் யாதவ், குா்கீரத்சிங் மான், வாஷிங்டன் சுந்தா், பவன் தேஷ்பாண்டே, ஆடம் ஸம்பா.

நேருக்கு நோ்: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா - பெங்களூா் அணிகள் இதுவரை 26 முறை நேருக்கு நோ் மோதியுள்ள நிலையில், கொல்கத்தா 15 வெற்றிகளையும், பெங்களூா் 11 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

ஆட்ட நேரம்
இரவு 7.30
நேரடி ஒளிபரப்பு
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com