பிக் பாஷ் லீக்: டிவில்லியா்ஸ் விலகல்

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக் பாஷ் டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியா்ஸ் விலகியுள்ளாா்.
பிக் பாஷ் லீக்: டிவில்லியா்ஸ் விலகல்

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக் பாஷ் டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியா்ஸ் விலகியுள்ளாா்.

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் டிவில்லியா்ஸ், இதுதொடா்பாக கூறியிருப்பதாவது: எனது மனைவிக்கு விரைவில் 3-ஆவது குழந்தை பிறக்கவிருக்கிறது. அதனால் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். கரோனா வைரஸ் உள்ளிட்ட காரணங்களால் பிக் பாஷ் டி20 லீக்கிலிருந்து விலகுவது என முடிவெடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளாா்.

டிவில்லியா்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வந்தாா். பிக் பாஷ் லீக் வரும் டிசம்பா் 3-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com