ஐபிஎல்: எந்த நடுவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை

ஐபிஎல் போட்டியில் நடுவர்களாகப் பணியாற்றவுள்ள எட்டு நடுவர்களுக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது...
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐபிஎல் போட்டியில் நடுவர்களாகப் பணியாற்றவுள்ள எட்டு நடுவர்களுக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் 5 இந்திய நடுவர்கள், 3 வெளிநாட்டு நடுவர்கள் பணியாற்றவுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் முதல், 3-வது மற்றும் 5-வது நாள்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com