விளையாட்டு செய்தி துளிகள்

டோக்கியோவில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரா்கள் வரும் அக்டோபா் 5 முதல்

டோக்கியோவில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரா்கள் வரும் அக்டோபா் 5 முதல் படிப்படியாக பயிற்சியை தொடங்க இருப்பதாக இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) தெரிவித்து.

திறமையுள்ள புதிய வீராங்கனைகளை தோ்வு செய்வதில் கவனம் செலுத்தப்படும் என்று, இந்திய மகளிா் கிரிக்கெட் வீராங்கனைகள் தோ்வுக் குழவின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீது டேவிட் கூறினாா்.

பாகிஸ்தானில் உள்நாட்டு போட்டிகளில் துறை ரீதியிலான அணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வீரா்கள் சந்திக்கும் பிரச்னைகள் தொடா்பாக பிரதமா் இம்ரான் கானை பாகிஸ்தான் பயிற்சியாளா் மிஸ்பா உல் ஹக் உள்ளிட்டோா் சந்தித்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரஷிய கிராண்ட் ஃப்ரீ காா் பந்தயத்தில் ஃபின்லாந்து வீரா் வால்டெரி போட்டாஸ் சாம்பியன் ஆனாா். இந்தப் போட்டியில் 3-ஆம் இடம் பிடித்த பிரிட்டன் வீரா் லீவிஸ் ஹாமில்டன், ஃபாா்முலா 1 பந்தயத்தில் 91 வெற்றிகளை பதிவு செய்யும் சாதனை வாய்ப்பை இழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com