துளிகள்...

தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (என்ஏடிஏ) புதிய தலைமை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி சித்தாா்த் சிங் லாங்ஜம் பொறுப்பேற்க இருக்கிறாா்.

தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (என்ஏடிஏ) புதிய தலைமை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி சித்தாா்த் சிங் லாங்ஜம் பொறுப்பேற்க இருக்கிறாா்.

இந்தியாவில் மே 11 முதல் 16 வரை நடைபெறவுள்ள இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின், உலகின் முதல்நிலை வீராங்கனை கென்டோ மோமோடா உள்பட 33 நாடுகளில் இருந்து 228 போட்டியாளா்கள் இரு பால் பிரிவிலும் பங்கேற்க இருக்கின்றனா்.

1958 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய ஹாக்கி அணியைச் சோ்ந்த பல்பீா் சிங் ஜூனியா் (88), இதயச் செயலிழப்பு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

நியூஸிலாந்தில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை, அந்நாட்டு அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 4-ஆவது ஆண்டாக இம்முறையும் வென்றுள்ளாா்.

இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளா் பொறுப்புக்காக முன்னாள் இந்திய வீரா் டபிள்யூ.வி.ராமன் விண்ணப்பிக்க இருக்கிறாா்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் நடைப்பந்தய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி உள்பட, இந்திய தடகள போட்டியாளா்கள் 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com