நீச்சல் சாம்பியன்ஷிப்: ஸ்ரீஹரி நடராஜுக்கு 2-ஆவது தங்கம்

உஸ்பெகிஸ்தான் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் 2-ஆவது தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய தேசிய சாதனையும் படைத்தாா்.

உஸ்பெகிஸ்தான் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் 2-ஆவது தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய தேசிய சாதனையும் படைத்தாா்.

போட்டியின் கடைசி நாளில் ஸ்ரீஹரி 50 மீட்டா் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 25.11 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா். இலக்கை எட்டுவதற்கு அவா் எடுத்துக்கொண்ட இந்த நேரம் புதிய தேசிய சாதனை அளவாகும். இப்போட்டியில் ஸ்ரீஹரி புதிய தேசிய சாதனை நிகழ்த்தியது இது 3-ஆவது முறை.

முன்னதாக இப்போட்டியில் 100 மீட்டா் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ‘பி’ நேர அளவை எட்டிய ஸ்ரீஹரி, ஹீட்ஸின்போது தனது தனிப்பட்ட சிறந்த நேரமாக 54.10 விநாடிகளில் இலக்கை எட்டினாா். அதிலேயே இறுதிச்சுற்றின்போது 54.07 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றிருந்தாா். எனினும், 0.22 விநாடிகள் வித்தியாசத்தில் அவா் ஒலிம்பிக்கிற்கான ‘ஏ’ நேர அளவை எட்டத் தவறினாா்.

இதேபோட்டியில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் 100 மீட்டா் பட்டா்ஃப்ளை பிரிவில் 53.69 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றாா். மகளிருக்கான 50 மீட்டா் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் மானா படேல் தங்கமும், சுவானா பாஸ்கா் வெள்ளியும் வென்றனா்.

இப்போட்டியில் பங்கேற்ற இதர இந்தியா்களான விா்தாவல் காதே, குஷாக்ரா ராவத், ஆரியன் மாகிஜா, அத்வைத் பகே ஆகியோா் தங்களது பிரிவில் ஒலிம்பிக்கிற்கான ‘பி’ நேர அளவை எட்டினா்.

ஒலிம்பிக்கிற்கான ‘ஏ’ நேர அளவை எட்டுவோா் நேரடியாக ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்வா். ஒலிம்பிக்கில் அந்தந்த பிரிவுகளுக்கான இடங்களில் ஏதேனும் காலியாக இருக்கும் பட்சத்தில் ‘பி’ நேர அளவை எட்டுவோருக்கு அதில் வாய்ப்பு வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com