லார்ட்ஸில் இந்தியாவைத் தொடர்ந்து திணறடிக்கும் ஆண்டர்சன்

இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவதென்றால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்...
லார்ட்ஸில் இந்தியாவைத் தொடர்ந்து திணறடிக்கும் ஆண்டர்சன்

இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவதென்றால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனுக்குத் தனி உற்சாகம் வந்துவிடுகிறது.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி, 2-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளா் ஜேம்ஸ் ஆண்டா்சன் அற்புதமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தாா்.

லார்ட்ஸ் மைதானத்தில் 7-வது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஆண்டர்சன். அதிலும் இந்தியாவுக்கு எதிராக மட்டும் நான்கு முறை. அதாவது சமீபகாலமாக இந்திய அணி எப்போதெல்லாம் லார்ட்ஸில் விளையாடுகிறதோ அப்போதெல்லாம் ஆண்டர்சன் பெரிய அச்சுறுத்தலாக விளங்கியிருக்கிறார். லார்ட்ஸில் 5 முறை இந்தியாவுக்கு எதிராக விளையாடி 4 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 9 இன்னிங்ஸில் 33 விக்கெட்டுகள்! 
லார்ட்ஸில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, மே.இ. தீவுகள் அணிகளுக்கு எதிராகத் தலா ஒருமுறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2017-க்குப் பிறகு லார்ட்ஸில் இந்தியாவுக்கு எதிராக மட்டும்தான் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இருமுறை. 

மேலும், 39 வயதில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஆண்டர்சன். கடந்த 70 வருடங்களில் ஹேட்லி மட்டுமே 39 வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com