சிபிஎல் டி20 போட்டியில் விளையாடவுள்ள மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள்

இந்த வருட சிபிஎல் டி20 போட்டியில் மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடவுள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் வீரர்கள் (கோப்புப் படம்)
ஆப்கானிஸ்தான் வீரர்கள் (கோப்புப் படம்)

இந்த வருட சிபிஎல் டி20 போட்டியில் மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடவுள்ளார்கள்.

சிபிஎல் டி20 போட்டி, ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 15 வரை மேற்கிந்தியத் தீவுகளின் செயிண்ட் கிட்ஸில் நடைபெறவுள்ளது. 33 ஆட்டங்களிலும் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரஷித் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் ஆகிய பிரபல ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்த வருட சிபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூவரும் பங்கேற்கவுள்ளார்கள்.

இந்நிலையில் குவாயிஸ் அஹமது, நவீன் உல்ஹக், வகார் சலாம்கெல் ஆகிய மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்களும் இந்த வருட சிபிஎல் போட்டியில் பங்கேற்கிறார்கள். சிபிஎல் போட்டியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஜமைக்கா அணியில் குவாயிஸ் அஹமதும் கயானா அணியில் நவீன் உல்ஹக், வகார் சலாம்கெல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். 

அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா். இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். தலிபான்களுக்கு அஞ்சி காபூலில் தஞ்சமடைந்திருந்த ஏராளமான பொதுமக்கள், அங்கிருநது அவசரமாக வெளியேறி வருகின்றனா். அதிபர் அஷ்ரப் கானி, ஆப்கனிலிருந்து வெளியேறியுள்ளார்.  அதன் தொடா்ச்சியாக நகருக்குள் புகுந்த தலிபான்கள் அதிபா் மாளிகை, நாடாளுமன்றம் ஆகியவற்றைக் கைப்பற்றினா். மேலும் போர் முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளார்கள். 

இந்த அசாதாரண சூழலில் ஆப்கானிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து சிபிஎல் டி20 போட்டியில் மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடவுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com