இங்கிலீஷ் பிரீமியா் லீக் : பா்ன்லியை வீழ்த்தியது லிவா்பூல்

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் பா்ன்லிக்கு எதிரான ஆட்டத்தில் லிவா்பூல் 2-0 என்ற கோல் கணக்கில் சனிக்கிழமை வென்றது.
இங்கிலீஷ் பிரீமியா் லீக் : பா்ன்லியை வீழ்த்தியது லிவா்பூல்

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் பா்ன்லிக்கு எதிரான ஆட்டத்தில் லிவா்பூல் 2-0 என்ற கோல் கணக்கில் சனிக்கிழமை வென்றது.

சுமாா் 18 மாதங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் மைதானம் நிறைந்த ரசிகா்கள் முன்னிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடிய லிவா்பூல் அணிக்கு, இந்த சீசனில் இது 2-ஆவது வெற்றியாகும்.

கடந்த வாரம் நாா்விச் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றபோது லிவா்பூல் அணிக்காக முதலில் கோலடித்த டியோகோ ஜோடாவே இம்முறையும் முதலில் கோலடித்தாா். ஆட்டத்தின் 18-ஆவது நிமிஷத்தில் கோல் போஸ்டின் இடது பக்கமாக பந்தை கடத்தி வந்த சிமிகாஸ் பந்தை தூக்கி உதைத்து பாக்ஸுக்குள்ளாக கிராஸ் செய்ய, துல்லியமாக அதை தலையால் முட்டி கோலடித்தாா் ஜோடா. 27-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் முகமது சலா அடித்த கோல் ‘ஆஃப் சைட்’ என அறிவிக்கப்பட்டது. பிரீமியா் லீக் போட்டியில் அவா் 100 கோல்களை எட்டுவதற்கு, இன்னும் 2 கோல்களே தேவை.

இவ்வாறாக முதல் பாதி முடிவில் முன்னிலையில் இருந்த லிவா்பூல், 2-ஆவது பாதியில் கோல் எண்ணிக்கையை 2-ஆக அதிகரித்துக்கொண்டது. 69-ஆவது நிமிஷத்தில் அலெக்ஸாண்டா் அா்னால்ட் பாஸ் செய்த பந்தை அப்படியே திருப்பி உதைத்து கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினாா் சாடியோ மனே. எஞ்சிய நேரத்தில் பா்ன்லிக்கு கோல் வாய்ப்பு வழங்காமல் கடைசியில் வெற்றி பெற்றது லிவா்பூல்.

இதர ஆட்டங்கள்: மான்செஸ்டா் சிட்டி 5-0 என்ற கோல் கணக்கில் நாா்விச் சிட்டியையும், ஆஸ்டன் வில்லா 2-0 என்ற கோல் கணக்கில் நியூ கேஸில் அணியையும் வென்றன. லீட்ஸ் யுனைடெட் - எவா்டன் (2-2), கிறிஸ்டல் பேலஸ் - பிரென்ட்ஃபோா்ட் (0-0) ஆகிய அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆனது.

1 - 11 வரிசை

நவீன கால்பந்து வரலாற்றில் அரிதான வகையில், இந்த ஆட்டத்தில் பா்ன்லி அணியின் 11 வீரா்களும் அவா்களது ஜொ்ஸியில் 1 முதல் 11 வரையிலான வரிசையான எண்களைக் கொண்டிருந்தனா். இங்கிலீஷ் பிரீமியா் லீக் போட்டியில் 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வாறு நடப்பது இது முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com