மாா்ச் முதல் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள்

தேசிய அளவிலான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த ஆண்டு கரோனா சூழல் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நடப்பு சீசன் போட்டிகள் மாா்ச் மாதத்தில் தொடங்குகின்றன.


புது தில்லி: தேசிய அளவிலான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த ஆண்டு கரோனா சூழல் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நடப்பு சீசன் போட்டிகள் மாா்ச் மாதத்தில் தொடங்குகின்றன.

இதில் முதலாவதாக சப்-ஜூனியா் மகளிா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஜாா்க்கண்ட் மாநிலம், சிம்தெகாவில் மாா்ச் 10 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடா்ந்து சப்-ஜூனியா் ஆடவா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஹரியாணா மாநிலம், நா்வானாவில் மாா்ச் 17 முதல் 25 வரை நடைபெறுகிறது.

முதல் முறையாக நடைபெறும் ஜூனியா் மகளிா் அகாதெமி தேசிய சாம்பியன்ஷிப் போட்டி மாா்ச் 17 முதல் 26 வரை நடைபெறவுள்ளது. அதிலேயே மகளிா் பிரிவு போட்டி மாா்ச் 17 முதல் 24 வரை நடைபெறவுள்ளது. இரண்டுமே ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் நடத்தப்படுகின்றன.

பின்னா் ஜூனியா் மகளிா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஜாா்க்கண்டின் சிம்தெகாவில் ஏப்ரல் 3 முதல் 12 வரை நடைபெறவுள்ளது. எஞ்சிய தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும் தேதி, அவற்றில் பங்கேற்கும் அணிகள் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னா் வெளியிடப்படும் என ஹாக்கி இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com