டி20: அற்புதமான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்த மே.இ. தீவுகள் அணி (ஹைலைட்ஸ் விடியோ)

ஜோஷ் ஹேசில்வுட். முதல் மூன்று ஓவர்களில் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
மே.இ. தீவுகள் அணி வீரர்கள் பூரன் - ஹெட்மையர் (கோப்புப் படம்)
மே.இ. தீவுகள் அணி வீரர்கள் பூரன் - ஹெட்மையர் (கோப்புப் படம்)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கிராஸ் ஐலைட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மே.இ. தீவுகள் அணி 20 ஓவர்களில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரே ரஸ்ஸல் 28 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து கெளரவமான ஸ்கோரைப் பெற்றுக் கொடுத்தார். 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜோஷ் ஹேசில்வுட். முதல் மூன்று ஓவர்களில் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

இலக்கை நன்கு விரட்டிய ஆஸ்திரேலிய அணி, கடைசிக்கட்டத்தில் தடுமாறியது. கடைசி ஆறு விக்கெட்டுகளை 19 ரன்களுக்கு இழந்ததால் தோல்வியடைந்தது. மிட்செல் மார்ஷ் 51 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி, 16 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இத்தனைக்கும் அந்த அணி, முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது. ஒபட் மெக்காய் 4 விக்கெட்டுகளும் ஹேடன் வால்ஷ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com