இரவு 11 மணிக்குத் தொடங்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 ஆட்டங்கள்!

பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணிக்கு முதல் ஆட்டமும் அடுத்த ஆட்டம் இரவு 11 மணிக்கும் தொடங்கவுள்ளன.
இரவு 11 மணிக்குத் தொடங்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 ஆட்டங்கள்!

இந்த வருட பிஎஸ்எல் டி20 போட்டி ஜூன் 9 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் என்கிற பிஎஸ்எல் 2021 போட்டியில் பங்கேற்ற ஏழு பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள். இவர்களில் ஆறு பேர் வீரர்கள். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அணி உரிமையாளர்களும் கலந்து பேசி, பிஎஸ்எல் போட்டியை ஒத்திவைப்பது எனக் கடந்த மார்ச் 4-ல் முடிவெடுத்தார்கள். இந்த வருட பிஎஸ்எல் போட்டியின் 34 ஆட்டங்களில் 14 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.  கரோனா பாதுகாப்பு வளையத்தில் அணியின் வீரர்களும் பயிற்சியாளர்களும் இருந்தபோதும் ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் பிஎஸ்எல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட 6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி அபுதாபியில் நடைபெறுகிறது.

ஜூன் 9 முதல் ஜூன் 24 வரை இந்த வருட பிஎஸ்எல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் என ஆறு நாள்களுக்கு நடைபெறவுள்ளன. அபுதாபி நேரப்படி முதல் ஆட்டம் மாலை 5 மணிக்குத் தொடங்கும். பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணிக்கு முதல் ஆட்டமும் அடுத்த ஆட்டம் இரவு 11 மணிக்கும் தொடங்கவுள்ளன.

இரவு 11 மணிக்கு பிஎஸ்எல் ஆட்டம் தொடங்கினால் முழு ஆட்டத்தையும் எப்படிப் பார்த்து முடிப்பது என ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அபுதாபியில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் இரு ஆட்டங்கள் உள்ள நாள்களில் முதல் ஆட்டம் மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. அதனால் 2-வது ஆட்டம் பாகிஸ்தான் நேரப்படி இரவு 11 மணிக்குத் தொடங்க வேண்டியுள்ளது. எனினும் ஒரே ஆட்டம் நடைபெறும் நாள்களில் பாகிஸ்தான் நேரப்படி 9 மணிக்கு அந்த ஆட்டம் தொடங்கும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com