டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான 16 பேர் கொண்ட மகளிர் ஹாக்கி அணியை இந்தியா வியாழக்கிழமை அறிவித்தது.
படம்: டிவிட்டர் | ஹாக்கி இந்தியா
படம்: டிவிட்டர் | ஹாக்கி இந்தியா


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான 16 பேர் கொண்ட மகளிர் ஹாக்கி அணியை இந்தியா வியாழக்கிழமை அறிவித்தது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஜூலை 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-இல் நிறைவடைகிறது. 1980 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மட்டுமே இந்திய மகளிர் ஹாக்கி இதற்கு முன்பு பங்கேற்றுள்ளது. எனவே, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்பது இது மூன்றாவது முறை.

இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி ராம்பால் தலைமையிலான அணியில் 8 பேர் முதன்முறையாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் விளையாடுகின்றனர். மற்ற 8 பேர் 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் விளையாடியுள்ளனர்..

அணி விவரம்:

கோல் கீப்பர்: சவிதா 
தடுப்பாட்டக்காரர்கள்: தீப் கிரேஸ் எக்கா, நிக்கி பிரதான், குர்ஜித் கௌர், உதிதா.
நடுகள வீராங்கனைகள்: நிஷா, நேஹா, சுஷிலா சானு, மோனிகா, நஞ்சோத் கௌர், சலிமா டேடே.
முன்கள வீராங்கனைகள்: ராணி, நவ்நீத் கௌர், லால்ரெம்சியாமி, வந்தனா கடாரியா, ஷர்மிளா, தேவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com