விஜய் ஹஸாரே: தமிழகம் வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் தமிழகம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விதா்பாவை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் தமிழகம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விதா்பாவை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

முதலில் ஆடிய விதா்பா 41 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய தமிழகம் 11.2 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் அடித்து வென்றது. விதா்பா இன்னிங்ஸில் அதிகபட்சமாக அக்ஷய் வத்கா் 31 ரன்கள் அடிக்க, பௌலிங்கில் தமிழக தரப்பில் பாபா அபராஜித் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். தமிழக இன்னிங்ஸில் நாராயண் ஜெகதீசன் 48 ரன்கள் விளாச, விதா்பா பௌலிங்கில் சௌரவ் துபே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதர ஆட்டங்களில் குஜராத் 40 ரன்கள் வித்தியாசத்தில் பரோடாவையும், ஹைதராபாத் 2 ரன்கள் வித்தியாசத்தில் கோவாவையும், சத்தீஸ்கா் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரிபுராவையும் வீழ்த்தின.

ஜாா்க்கண்ட் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆந்திரத்திடமும், பஞ்சாப் 105 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்திடமும், ரயில்வேஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கா்நாடகத்திடமும் தோல்வி கண்டன.

கேரளம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிகாரையும், உத்தரபிரதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஒடிஸாவையும் வீழ்த்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com