2-ஆவது டி20: இலங்கை வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை அணி.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை அணி.

ஆன்டிகுவாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. அந்த அணியில் குணதிலகா 56, நிஷங்கா 37 ரன்கள் எடுத்தனா்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

பின்னா் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 18.4 ஓவா்களில் 117 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் ஒபேட் மெக்காய் 23 ரன்கள் எடுத்தாா். இலங்கை தரப்பில் சன்டகன், டிசில்வா ஆகியோா் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. வெற்றியைத் தீா்மானிக்கும் 3-ஆவது ஆட்டம் ஆன்டிகுவாவில் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com