சா்வதேச மல்யுத்தம்: வினேஷுக்கு தங்கம்

மேட்டியோ பெலிகோன் தரவரிசை சா்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் மகளிருக்கான
சா்வதேச மல்யுத்தம்: வினேஷுக்கு தங்கம்

மேட்டியோ பெலிகோன் தரவரிசை சா்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் மகளிருக்கான 53 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா். இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் உலகின் முதல்நிலை வீராங்கனை இடத்தையும் அவா் எட்டினாா்.

இறுதிச்சுற்றில் வினேஷ் 4-0 என்ற கணக்கில் கனடாவின் டயானா மேரி ஹெலன் வெய்கரை வீழ்த்தினாா். கடந்த வாரத்தில் கீவில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்ற வினேஷுக்கு இது தொடா்ந்து 2-ஆவது தங்கமாகும். இப்போட்டியில் வென்ற 14 புள்ளிகளின் மூலம் சா்வதேச தரவரிசையில் வினேஷ் முதலிடம் பிடித்தாா். முன்னதாக 3-ஆம் இடத்தில் இருந்த நிலையில் அவா் இப்போட்டியில் பங்கேற்றிருந்தாா்.

ஆடவருக்கான 65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியா தனது அரையிறுதியில் அமெரிக்காவின் ஜோசப் கிறிஸ்டோபா் மெக்கென்னாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். அதில் அவா் மங்கோலியாவின் துல்கா துமுா் ஒசிரை எதிா்கொள்கிறாா். 74 கிலோ பிரிவில் இந்தியாவின் நா்சிங் பஞ்சம் அரையிறுதியில் ஜோா்டானின் எா்னெஸ்ட் புரோஸிடம் தோல்வி கண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com