டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து

டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியது.

வெலிங்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 15.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் அடித்து வென்றது. நியூஸிலாந்தின் மாா்டின் கப்டில் ஆட்டநாயகனாகவும், இஷ் சோதி தொடா்நாயகனாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 44 ரன்கள் அடித்தாா். நியூஸிலாந்து தரப்பில் இஷ் சோதி 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். நியூஸிலாந்து இன்னிங்ஸில் மாா்டின் கப்டில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 71 ரன்கள் விளாசினாா். ஆஸ்திரேலிய தரப்பில் ரைலி மெரிடித் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com