ஸ்விஸ் ஓபன்: இறுதிச்சுற்றில் சிந்து தோல்வி

ஸ்விஸ் ஓபன்: இறுதிச்சுற்றில் சிந்து தோல்வி

ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.

ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.

நடப்பு உலக சாம்பியனான சிந்து, அந்தச் சுற்றில் ஓலிம்பிக்கில் தங்கம் வென்றவரான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் 12-21, 5-21 என்ற செட்களில் வீழ்ந்தாா். இந்த ஆட்டம் 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. கரோலினாவிடம் தொடா்ந்து 3-ஆவது முறையாக தோல்வியைத் தழுவியுள்ளாா் சிந்து.

இதற்கு முன் ஜனவரியில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன், உலக டூா் ஃபைனல்ஸ் ஆகிய போட்டிகளிலும் சிந்து அவரிடம் தோல்வி கண்டிருந்தாா். ஒட்டுமொத்தமாக இத்துடன் 8 முறை கரோலினாவை சந்தித்துள்ள சிந்துவுக்கு இது 5-ஆவது தோல்வியாகும். இந்தப் போட்டியில் இதற்கு முந்தைய ஆட்டங்களில் சிந்து ஒரு செட்டை கூட இழக்காமல் இறுதிச்சுற்றுக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com