10 ரன்களில் தோற்பதற்கு இதுவே பரவாயில்லை: மார்கன்

10, 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்பதற்கு இப்படி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோற்பதே மேல் என இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.
10 ரன்களில் தோற்பதற்கு இதுவே பரவாயில்லை: மார்கன்

10, 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்பதற்கு இப்படி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோற்பதே மேல் என இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டம் முடிந்தவுடன் மார்கன் இதுபற்றி கூறியது:

"நிறைய விஷயங்களை இன்று சரியாகச் செய்தோம். ஆடுகளம் சிறப்பாக இருந்தது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் இருந்தது. அதேசமயம், சிறிது நேரம் தாக்குப்பிடித்தால் பெரிய ஸ்கோரும் குவிக்கலாம். இன்று செயல்படுத்திய விதத்தைக் காட்டிலும் எங்களது திட்டங்களையும் ஆட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். 

எங்களது முதல் 7 வரிசை பேட்ஸ்மேன்களைப் பார்த்தால் நாங்கள் அனைவரும் 60-க்கும் குறைவான பந்துகளில் சதம் அடித்துள்ளோம். இந்த பாணியில் விளையாடுவதைத்தான் நாங்கள் விரும்புவோம். சில சமயங்களில் அது பயனளிக்காமல் போகலாம். ஆனால், 10-20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்பதைக் காட்டிலும் இதுவே மேலானது. இந்த பாணியில்தான் எங்களது ஆட்டத்தைத் தொடரவுள்ளோம்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com