டெஸ்ட் வருடாந்திர தரவரிசை: விராட் கோலி சாதனை!

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
டெஸ்ட் வருடாந்திர தரவரிசை: விராட் கோலி சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வருடாந்திர தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

மே 1-ம் தேதி வரையிலான காலங்களில் அணிகளின் செயல்பாடு எப்படியிருந்தது என்பதை அடைப்படையாகக் கொண்டு வருடாந்திரத் தரவரிசையை கணக்கிடுகிறது ஐசிசி. அதன்படி தற்போது வருடாந்திர தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக வருடாந்திர தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது. இந்திய அணிக்கு 2017, 2018, 2019, 2020, 2021 ஆகிய ஐந்து வருடங்களிலும் தொடர்ச்சியாக முதல் இடம் கிடைத்துள்ளது. 

வருடாந்திர தரவரிசையில் நியூசிலாந்து 2-வது இடத்திலும் இங்கிலாந்து 3-வது இடத்திலும் ஆஸ்திரேலியா 4-வது இடத்திலும் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com