பெங்களூரை வீழ்த்தியது ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 52-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது. 
பெங்களூரை வீழ்த்தியது ஹைதராபாத்


அபுதாபி,: ஐபிஎல் போட்டியின் 52-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது. 
அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய பெங்களூர் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது. ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்டநாயகன் ஆனார். 
இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் 2-ஆவது இடத்தைப் பிடித்திருக்கும் பெங்களூர். பிளேயிங் லெவனில் இரு அணிகளுமே மாற்றம் செய்யவில்லை. டாஸ் வென்ற பெங்களூர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 
ஹைதராபாத் இன்னிங்ûஸ தொடங்கியோரில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13 ரன்கள் சேர்த்து அபிஷேக் சர்மா வெளியேறினார். அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களம் காண, மறுபுறம் நிதானமாக ரன்கள் சேகரித்தார் ஜேசன் ராய். 
வில்லியம்சன் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் 12-ஆவது ஓவரில் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். தொடர்ந்து ஆட வந்த பிரியம் கர்க் 1 சிக்ஸருடன் 15 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். 
பின்னர் அப்துல் சமத் ஆடுகளத்துக்கு வர, மறுபுறம் நிதானமாக ரன்கள் சேர்த்து வந்த ஜேசன் ராய் 5 பவுண்டரிகளுடன் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து ரித்திமான் சாஹா ஆட வர, அப்துல் சமத் 1 ரன்னே எடுத்த நிலையில் யுஜவேந்திர சஹல் வீசிய 16-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். தொடர்ந்து ஜேசன் ஹோல்டர் களம் புக, பவுண்டரியுடன் 10 ரன்கள் சேர்த்திருந்த சாஹா பெவிலியன் திரும்பினார். 
கடைசி விக்கெட்டாக ஜேசன் ஹோல்டர் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு வீழ்ந்தார். ஓவர்கள் முடிவில் ரஷீத் கான் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் அடித்திருந்தார். 
பின்னர் ஆடிய பெங்களூரில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 4 பவுண்டரிகளுடன் 41, கிளென் மேக்ஸ்வெல் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் விளாசினர். எஞ்சியோரில் கேப்டன் கோலி 5, கிறிஸ்டியன் 1, ஸ்ரீகர் பரத் 12, ஷாபாஸ் அகமது 14 ரன்களுக்கு வீழ்ந்தனர். 
ஓவர்கள் முடிவில் டி வில்லியர்ஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 19, ஜார்ஜ் கார்டன் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், ஜேசன் ஹோல்டர், சித்தார்த் கெüல், உம்ரான் மாலிக், ரஷீத் கான் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

புள்ளிகள் பட்டியல்

(ஹைதராபாத் - பெங்களூர்  ஆட்டம் (52) வரை)


டெல்லி    13    10    3    20
சென்னை    13    9    4    18
பெங்களூர்    13    8    5    16
கொல்கத்தா    13    6    7    12
மும்பை    13    6    7    12
பஞ்சாப்    13    5    8    10
ராஜஸ்தான்    13    5    8    10
ஹைதராபாத்    13    3    10    6

சுருக்கமான ஸ்கோர்

ஹைதராபாத் - 141/7

ஜேசன் ராய்    44
கேன் வில்லியம்சன்    31
பிரியம் கர்க்    15 

பந்துவீச்சு

படேல்-3/33; கிறிஸ்டியன்-2/14; 
யுஜவேந்திர சஹல்- 1/27

பெங்களூர்- 137/6


தேவ்தத் படிக்கல்    41
கிளென் மேக்ஸ்வெல்    40
டி வில்லியர்ஸ்    19*

இன்றைய ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ்-
பஞ்சாப் கிங்ஸ்

நேரம்: பிற்பகல் 3.30
இடம்: துபை


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-
ராஜஸ்தான் ராயல்ஸ்

நேரம்: இரவு 7.30
இடம்: ஷார்ஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com