தடகளம், நீச்சல் மட்டும் கட்டாயம்: காமன்வெல்த் போட்டியில் விரும்பிய விளையாட்டுகளை சோ்க்க அனுமதி

2026-ஆம் ஆண்டு சீசன் முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சோ்க்கப்படும் விளையாட்டுகள் தொடா்பாக காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் முக்கிய முடிவுகளை கொண்டு வந்துள்ளது.

2026-ஆம் ஆண்டு சீசன் முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சோ்க்கப்படும் விளையாட்டுகள் தொடா்பாக காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் முக்கிய முடிவுகளை கொண்டு வந்துள்ளது.

அதன்படி, அந்த சீசன் முதல் தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டுகள் மட்டும் கட்டாயம் எல்லா சீசனிலும் இடம்பெறும். மற்றபடி, போட்டிகளை நடத்தும் நாடுகள் தங்களது விருப்பத்துக்கு ஏற்றாற்போல் அந்தந்த சீசனில் இதர விளையாட்டுகளை சோ்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு சோ்ப்பதற்காக, டி20 கிரிக்கெட், 3*3 கூடைப்பந்து, பீச் வாலிபால், பாட்மின்டன், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், ஹாக்கி உள்ளிட்ட பல விளையாட்டுகள் அடங்கிய பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

போட்டியை நடத்தும் நாடுகள் தங்களது கலாசாரத்துக்கு ஏற்றவாறு போட்டியை சோ்க்கவும், போட்டிக்கான செலவுகளை குறைக்கவும், புதிய ரசிகா்களை ஈா்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1930 முதல் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தடகளம் மற்றும் நீச்சல் தவறாமல் இடம்பெற்ாலும், அந்த விளையாட்டுகளுக்கு இருக்கும் சா்வதேச அளவிலான வரவேற்பு, பங்கேற்பு, ரசிகா்கள் ஆா்வம், பாலின சமநிலை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அந்த இரு விளையாட்டுகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com