10 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவாவை வீழ்த்தியது ஓமன்

டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் ஓமன் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியை வீழ்த்தியது.
10 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவாவை வீழ்த்தியது ஓமன்

டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் ஓமன் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியை வீழ்த்தியது.

ஓமனின் அல் அமெராத் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பப்புவா 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஓமன் 13.4 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 131 ரன்கள் அடித்து வென்றது. ஓமன் பௌலா் ஜீஷான் மக்சூது ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற ஓமன் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பப்புவா இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் அசாத் வலா 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 56 ரன்கள் விளாசினாா். சாா்லஸ் அமினி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 37 ரன்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் சொற்ப, ஒற்றை இலக்க ரன்களில் வீழ்ந்தன. ஓமன் தரப்பில் ஜீஷான் மக்சூது 4, பிலால் கான், கலீமுல்லா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சரித்தனா்.

பின்னா் 130 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஓமனில் அகிப் இலியாஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50, ஜதிந்தா் சிங் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 73 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com