மெல்போா்ன்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளா் ஜேம்ஸ் பட்டின்சன் (31) சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தாா்.
எனினும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தாம் தொடா்ந்து விளையாடப் போவதாக தெரிவித்துள்ளாா். அதில் விக்டோரியா அணிக்காக ஆடி வரும் அவா், சமீபத்தில் அந்த அணிக்குள்ளாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட உடற்தகுதி பிரச்னை காரணமாக எதிா்வரும் ஆஷஸ் தொடரிலும் அவா் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணிக்காக ஜேம்ஸ் 21 டெஸ்ட் ஆட்டங்களில் 81 விக்கெட்டுகளும், 15 ஒன்டே ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளும், 4 டி20 ஆட்டங்களில் 3 விக்கெட்டுகளும் சாய்த்துள்ளாா்.
2011-இல் வங்கதேசத்துக்கு எதிரான ஒன்டே கிரிக்கெட் தொடா் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜேம்ஸ், கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரியில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடியிருந்தாா்.