கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக, வரும் நவம்பரில் வங்கதேசம் செல்கிறது.
பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நவம்பர் - டிசம்பரில் டாக்கா, சத்தோர்கம் நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில் டெஸ்ட் தொடரானது, ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. கடைசியாக பாகிஸ்தான் அணி கடந்த 2015-இல் வங்கதேசம் வந்திருந்தபோது 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது.
டி20 தொடர்
முதலாவது ஆட்டம்
-நவம்பர் 19 - டாக்கா
2-ஆவது ஆட்டம்
-நவம்பர் 20 - டாக்கா
3-ஆவது ஆட்டம்
-நவம்பர் 22 - டாக்கா
டெஸ்ட் தொடர்
முதல் டெஸ்ட் - நவம்பர் 26
-சத்தோர்கம்
2-ஆவது டெஸ்ட் - டிசம்பர் 4
-டாக்கா