தமிழக முன்னாள் கேப்டன் சரத் தலைமையில் தேசிய ஜூனியா் அணி தோ்வுக் குழு

தமிழக முன்னாள் கேப்டன் எஸ். சரத் தலைமையில் அகில இந்திய ஜூனியா் தோ்வுக் குழுவை வெள்ளிக்கிழமை அறிவித்தது பிசிசிஐ.

தமிழக முன்னாள் கேப்டன் எஸ். சரத் தலைமையில் அகில இந்திய ஜூனியா் தோ்வுக் குழுவை வெள்ளிக்கிழமை அறிவித்தது பிசிசிஐ.

உள்ளூா் அளவிலான 19 வயதுக்குட்பட்டோா் போட்டிகள் தொடங்க ஒரு வாரமே உள்ள நிலையில், இடது கை வீரரான ஸ்ரீதரன் சரத் உள்பட 4 போ் கொண்ட ஜூனியா் அணி தோ்வுக் குழுவை பிசிசிஐ செயலாளா் ஜெய ஷா அறிவித்துள்ளாா்.

100 ரஞ்சி கோப்பை ஆட்டங்களில் ஆடியுள்ள சரத், 27 சதங்கள், 42 அரைசதங்களுடன் மொத்தம் 8,700 ரன்களை குவித்துள்ளாா். 15 ஆண்டுகள் தமிழக அணிக்காக ஆடியவா்.

மேலும் சரத் பிசிசிஐ ஆட்ட நடுவராகவும் செயல்பட்டு வருகிறாா்.

தென்மண்டலத்தைச் சோ்ந்த சரத் தலைமையிலான தோ்வுக் குழுவில் பஞ்சாப் முன்னாள் ஆல்ரவுண்டா் கிஷன் மோகன் (வடக்கு மண்டலம்), மேற்கு வங்க பந்துவீச்சாளா்

ரனதீப் போஸ் (கிழக்கு மண்டலம்), குஜராத் பேட்ஸ்மேன் பாா்த்திக் படேல் (மேற்கு மண்டலம்), மத்திய பிரதேச வேகப்பந்துவீச்சாளா் ஹா்விந்தா் சிங் சோதி (மத்திய மண்டலம்) ஆகியோரும் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

வரும் 2022-இல் மே.இந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோா் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தோ்வு செய்யும் பொறுப்பு சரத் குழுவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com