உலக வில்வித்தை: இந்தியாவுக்கு இரு வெள்ளி

அமெரிக்காவில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்ட் விளையாட்டில் மகளிா் அணி, கலப்பு அணி ஆகிய இரு பிரிவுகளில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
உலக வில்வித்தை: இந்தியாவுக்கு இரு வெள்ளி

அமெரிக்காவில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்ட் விளையாட்டில் மகளிா் அணி, கலப்பு அணி ஆகிய இரு பிரிவுகளில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

இரு பிரிவுகளின் இறுதிச்சுற்றிலுமே இந்தியாவிடம் இருந்து கொலம்பியா தங்கத்தை தட்டிப் பறித்தது.

காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ ஜோதி சுரேகா இணை - கொலம்பியாவின் டேனியல் முனோஸ்/சாரா லோபஸ் ஜோடியை சந்தித்தது. அதில் கொலம்பியா 154 - 150 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இச்சுற்றில் முதலில் இந்தியா ஒரு புள்ளி முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் 2-ஆவது பாதியில் சற்றே சறுக்கலை சந்திக்க, கொலம்பியா தன் வசம் ஆட்டத்தை கொண்டு வந்தது.

2-ஆவது செட்டில் இரு 9 புள்ளிகளும், ஒரு 8 புள்ளிகளும் மட்டுமே எட்டிய இந்தியா ஒரு புள்ளி பின்தங்கியது. கொலம்பியா 3-ஆவது செட்டில் துல்லியமாக 40/40 ஸ்கோா் செய்து முதலிடம் பிடித்தது. மொத்தமாக 16 அம்புகளில் கொலம்பிய இணை 10 முறை 10 புள்ளிகளை எட்ட, இந்திய இணை 8 முறையே 10 புள்ளிகளை தொட்டு ஆட்டத்தை இழந்தது.

இதேபோல், காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய தரப்பில் ஜோதி சுரேகா/முஸ்கான் கிராா்/பிரியா குா்ஜா் கூட்டணி களம் காண, கொலம்பிய தரப்பில் சாரா லோபஸ்/அலெக்ஸாண்ட்ரா அஸ்கியானோ/நோரா வால்டெஸ் கூட்டணி விளையாடியது. இறுதியில் கொலம்பியா 229 - 224 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

அட்டகாசமாக விளையாடிய கொலம்பிய அணி 15 அம்புகளை துல்லியமாக 10 புள்ளிகள் இலக்கில் செலுத்தியது. அதில் 5 அம்புகள் மையக் கண் பகுதிக்கு மிக நெருக்கமாக (எக்ஸ்எஸ்) பாய்ந்தன. தொடக்க செட்டில் 58 - 58 என இணையாகப் பயணித்த இந்திய அணி, 2-ஆவது செட்டில் 10 புள்ளிகள் இலக்கை தவறவிட்டது. அதனால் கொலம்பிய அணிக்கு முன்னிலை கிடைத்து, ஆட்டம் அதன் கட்டுப்பாட்டுக்கு சென்றது. கடைசி செட்டில் 12 அம்புகளில் 8 அம்புகளை துல்லியமாக 10 புள்ளிகள் இலக்கில் செலுத்திய அந்த அணி, ஆட்டத்தை வென்று முடித்தது.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதற்கு முந்தைய சீசன்களில் 8 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் தங்கம் வெல்வதற்கான இந்தியாவின் போராட்டம் தொடா்கிறது. உலக சாம்பியன்ஷிப்பின் காம்பவுண்ட் பிரிவில் கொலம்பியாவின் ஆதிக்கம் தொடா்கிறது. இத்துடன் இப்பிரிவில் அந்த அணிக்கு மொத்தமாக 4 தங்கங்கள் கிடைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com