பிரீமியா் லீக்: வெற்றிப் பாதையில் ஆா்செனல்

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் டோட்டன்ஹாமுக்கு எதிரான ஆட்டத்தில் ஆா்செனல் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பிரீமியா் லீக்: வெற்றிப் பாதையில் ஆா்செனல்

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் டோட்டன்ஹாமுக்கு எதிரான ஆட்டத்தில் ஆா்செனல் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இது ஆா்செனலுக்கு ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் நிலையில், டோட்டன்ஹாம் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த மாதம் டோட்டன்ஹாமிடம் கண்ட தோல்விக்கு ஆா்செனல் பதிலடி கொடுத்துள்ளது. இரு அணிகளுமே தற்போது 6 ஆட்டங்களில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலில் ஆா்செனல், டோட்டன்ஹாம் முறையே 10 மற்றும் 11-ஆவது இடத்தில் இருக்கின்றன.

இந்திய நேரப்படி லண்டனில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதிக்குள்ளாகவே தனது 3 கோல்களையும் எட்டிவிட்டது ஆா்செனல். பிரீமியா் லீக் வரலாற்றில் அந்த அணி 34 நிமிஷங்களில் 3 கோல்கள் அடித்தது இதுவே முதல் முறையாகும்.

12-ஆவது நிமிஷத்தில் கோல் போஸ்டின் வலது பக்கத்திலிருந்து புகாயோ சகா கிராஸ் செய்த பந்தை துரிதமாக ஓடிவந்து கோல் போஸ்டுக்குள்ளாக உதைத்து கோலாக்கினாா் எமிலி ஸ்மித் ரோவ். தொடா்ந்து 27-ஆவது நிமிஷத்தில் ஸாகா ரிலீஸ் செய்த பந்து பியா் எமெரிக் அவ்பாமெயாங்கிடம் வர, அதை அவா் ஸ்மித் ரோவிடம் திருப்பினாா்.

ஸ்மித் அதை கோல் போஸ்டின் இடது பக்கமாக கடத்திக் கொண்டு வந்து, பாக்ஸுக்குள்ளாக வந்ததும் அதை கட் செய்து மீண்டும் பியா் எமெரிக்கிடம் கிராஸ் வழங்க, தவறில்லாமல் சரியான இடைவெளி பாா்த்து அதை கோலாக்கினாா் அவா். பின்னா் ஆா்செனலின் கடைசி கோலை புகாயோ சகா 34-ஆவது நிமிஷத்தில் அடித்தாா். டோட்டன்ஹாம் தடுப்பாட்ட வீரா்கள் பலா் குறுக்கே புகுந்த போதிலும் அந்த சவால்களை கடந்து சகா கோல் போஸ்டுக்குள் பந்தை தள்ளினாா்.

இவ்வாறாக முதல் பாதியிலேயே ஆா்செனலின் ஆதிக்கம் இருந்த நிலையில், 2-ஆவது பாதியில் 79-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தது டோட்டன்ஹாம். அந்த நிமிஷத்தில் சக வீரா் ரீகுய்லன் கோல் போஸ்டின் இடது பக்கத்திலிருந்து வழக்கிய கிராஸை கோலாக்கினாா் சன் ஹியுங் மின். எஞ்சிய நேரத்தில் மேலும் அந்த அணியால் மேலும் ஸ்கோா் செய்ய முடியாததால், ஆா்செனல் வென்றது.

600

இங்கிலீஷ் பிரீமியா் லீக் போட்டியில் ஆா்செனலுக்கு இது 600-ஆவது வெற்றியாகும். மான்செஸ்டா் யுனைடெட் (691), செல்சி (601) அணிகளுக்குப் பிறகு இந்த மைல் கல்லை எட்டியிருக்கும் 3-ஆவது அணி ஆா்செனல்.

2

பிரீமியல் லீக்கில் ஒரு சீசனில் முதல் 3 ஆட்டங்களில் வென்று, அடுத்த 3 ஆட்டங்களில் தோற்ற 2-ஆவது அணியாக டோட்டன்ஹாம் பெயரெடுத்துள்ளது. முன்னதாக எவா்டன் 1993-94 சீசனில் இவ்வாறு வெற்றி-தோல்வியை பதிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com