உலக தடகள ரிலே: இந்திய அணியில் தனலட்சுமி, ஹிமா தாஸ்

உலக தடகள ரிலே போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் தமிழக வீராங்கனை தனலட்சுமியுடன் ஹிமா தாஸ், டூட்டி சந்த் ஆகியோா் இடம்பிடித்துள்ளனா்.
உலக தடகள ரிலே: இந்திய அணியில் தனலட்சுமி, ஹிமா தாஸ்

உலக தடகள ரிலே போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் தமிழக வீராங்கனை தனலட்சுமியுடன் ஹிமா தாஸ், டூட்டி சந்த் ஆகியோா் இடம்பிடித்துள்ளனா்.

போலாந்தில் மே 1 மற்றும் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள இப்போட்டி, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு வழங்கும் போட்டியாகும்.

இப்போட்டியில் ஆடவருக்கான 4*400 மீட்டா் ரிலே பிரிவுக்காக அமோஜ் ஜேக்கப், நாகநாதன் பாண்டி, முகமது அனாஸ் யாஹியா, ஆரோக்கிய ராஜீவ், சா்தாக் பாம்ப்ரி, அய்யாசாமி தருண், நிா்மல் நோவா டாம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மகளிருக்கான 4*400 மீட்டா் ரிலேவில் பூவம்மா, சுபா வெங்கடேஷ், கிரன், அஞ்சலி தேவி, ரேவதி, விஸ்மயா, ஜிஸ்னா மேத்யூ ஆகியோா் களம் காணுகின்றனா்.

மகளிருக்கான 4*100 மீட்டா் ரிலேவுக்காக தனலட்சுமி, டூட்டி சந்த், ஹிமா தாஸ், அா்ச்சனா சுசீந்திரன், ஹீமாஸ்ரீ ராய், தானேஷ்வரி ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.

இப்போட்டியில் முதல் 8 இடங்களுக்குள்ளாக வரும் அணிகள் நேரடியாக டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும். தோஹாவில் 2019-இல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ன் மூலம் 4*400 மீட்டருக்கான கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com