விளையாட்டு: செய்திகள் சில வரிகளில்..

  • கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், கரோனா சூழல் காரணமாக மே 23-ஆம் தேதிக்குப் பதிலாக ஒரு வாரம் தாமதமாக மே 30-ஆம் தேதி தொடங்குகிறது.
  • இந்திய ஆடவா் மற்றும் மகளிா் ஹாக்கி அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹரேந்திர சிங், அமெரிக்க ஆடவா் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடப்புச் சாம்பியனான பேயா்ன் முனீச் அணிக்கு எதிரான காலிறுதியின் முதல் பகுதி ஆட்டத்தில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
  • இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது தோள்பட்டை பகுதியில் காயமடைந்த இந்திய வீரா் ஷ்ரேயஸ் ஐயருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
  • இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் வாா்விக்ஷைா் அணியில் விளையாடத் தோ்வாகியுள்ள இந்திய வீரா் ஹனுமா விஹாரி, 6 நாள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு போட்டியின் தொடக்க நிலையிலிருந்தே களம் காண இருக்கிறாா்.
  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் டீவன் கான்வே உள்ளிட்ட 3 வீரா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com