செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை காலமானார்

கே. விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 92.
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை காலமானார்

விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை உடல்நலக் குறைவால் காலமானார். 

ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். 1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன ஆனந்த், 2000-ம் ஆண்டில், முதல்தடவையாக உலக சாம்பியன் ஆனார். தொடர்ந்து 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து வென்று சாதனை செய்தார். சூசன் நினனுடன் இணைந்து மைண்ட் மாஸ்டர் என்கிற சுயசரிதை நூலை ஆனந்த் எழுதியுள்ளார். மேலும் விஸ்வநாதனின் ஆனந்தின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படத்தைப் பிரபல ஹிந்தி இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்குகிறார்.

இந்நிலையில் ஆனந்தின் தந்தை கே. விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 92.

தென்னிந்திய ரயில்வேயில் பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற விஸ்வநாதனுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளார்கள். 

விஸ்வநாதனின் மறைவு குறித்து ஆனந்தின் மனைவி அருணா ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஆனந்துக்குப் பக்கபலமாக அவர் இருந்தார். ஆனந்தின் அனைத்து உலக செஸ் சாம்பியன்ஷிப் வெற்றிகளையும் பார்த்துள்ளார். ஆனந்தின் சாதனைகள் குறித்து பெருமிதம் கொண்டிருந்தார் எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com