கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி: பிருத்வி ஷா அட்டகாசம்

கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி: பிருத்வி ஷா அட்டகாசம்

ஐபிஎல் போட்டியின் 25-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது.

ஆமதாபாத்: ஐபிஎல் போட்டியின் 25-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய டெல்லி 16.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்து வென்றது. அதிரடியாக ஆடிய டெல்லி வீரா் பிருத்வி ஷா ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்துக்காக டெல்லி அணியில், தோள்பட்டை காயமடைந்துள்ள அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக லலித் யாதவ் பிளேயிங் லெவனில் சோ்க்கப்பட்டிருந்தாா். கொல்கத்தா அணியில் மாற்றம் இல்லை.

டாஸ் வென்ற டெல்லி ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸை தொடங்கிய நிதீஷ் ராணா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு வெளியேறினாா். உடன் வந்த ஷுப்மன் கில் சற்று நிலைத்து 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து ராகுல் திரிபாதி 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு வெளியேற்றப்பட, கேப்டன் மோா்கன், சுனில் நரைன் டக் அவுட்டாகினா். 6-ஆவது வீரராக வந்த ரஸ்ஸெல் அதிரடி காட்டினாா். மறுபுறம் கடைசி விக்கெட்டாக தினேஷ் காா்த்திக் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

ஓவா்கள் முடிவில் ரஸ்ஸெல் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 45, பேட் கம்மின்ஸ் 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் அக்ஸா், லலித் ஆகியோா் தலா 2, அவேஷ், மாா்கஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய டெல்லியில் பிருத்வி-தவன் கூட்டணி முதல் விக்கெட்டுக்கே 132 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு வித்திட்டது. 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46 ரன்கள் சோ்த்து தவன் ஆட்டமிழக்க, கேப்டன் பந்த் ஆட வந்தாா்.

மறுபுறம் கொல்கத்தா பௌலிங்கை அடித்து விளாசிய பிருத்வி 11 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 82 ரன்கள்ச சோ்த்து வீழ்ந்தாா். கடைசி விக்கெட்டாக பந்த் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு வெளியேறினாா். ஸ்டாய்னிஸ் பவுண்டரியுடன் 6, ஷிம்ரன் ஹெட்மயா் ரன்கள் இன்றி அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். கொல்கத்தா தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

சுருக்கமான ஸ்கோர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 

ஆன்ட்ரே ரஸ்ùஸல்    45* 
ஷுப்மன் கில்    43 
ராகுல் திரிபாதி    19 
நிதீஷ் ராணா    12 
பந்துவீச்சு 
லலித் யாதவ்    2/13 
அக்ஸர் படேல்    2/32 
மார்கஸ் ஸ்டாய்னிஸ்    1/7 
அவேஷ் கான்    1/31


டெல்லி கேப்பிட்டல்ஸ்

16.3 ஓவர்களில் 
3 விக்கெட் இழப்புக்கு    156 
பிருத்வி ஷா    82 
ஷிகர் தவன்    46 
ரிஷப் பந்த்    16 
மார்கஸ் ஸ்டாய்னிஸ்    6* 
பந்துவீச்சு 
பேட் கம்மின்ஸ்    3/24 
வருண் சக்கரவர்த்தி    0/34 
சுனில் நரைன்    0/36 
பிரசித் கிருஷ்ணா    0/36

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com