முதல் டி20: ஆஸி.யை வென்றது வங்கதேசம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் வங்கதேசம் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களே அடித்தது. வங்கதேச அணியின் நசும் அகமது ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, பேட் செய்த வங்கதேசத்தில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் அடித்தாா். ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக மிட்செல் மாா்ஷ் மட்டும 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்கள் சோ்க்க, வங்கதேச பௌலிங்கில் நசும் அகமது 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com