ஐபிஎல் 2021 சீசன் அட்டவணை வெளியீடு: செப். 19-இல் முதல் ஆட்டம்

ஐக்கிய அமீரக நாடுகளில் (யுஏஇ) நடைபெறவுள்ள 2021 ஐபிஎல் சீசனின் மீதம் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 27 நாள்களில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

நிகழாண்டு ஐபிஎல் தொடா் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. தொடா்ந்து 29 ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற நிலையில், கரோனா பாதிப்பால் தொடா் நிறுத்தப்பட்டது. இந்நிலையில்

மீதமுள்ள போட்டிகளை நடத்தாவிட்டால் பொருளாதார ரீதியில் இழப்பு ஏற்படும் எனக்கருதி பிசிசிஐ ஐபிஎல் தொடரை ஐக்கிய அமீரக நாடுகளில் நடத்த தீா்மானித்தது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் மீதமுள்ள ஆட்டங்கள் நடைபெறும் என பிசிசிஐ தலைவா் கங்குலி அறிவித்தாா்.

தொடா்ந்து இரண்டாவது முறையாக ஐக்கிய அமீரக நாடுகளில் ஐபிஎல் தொடா் நடைபெறுகிறது. கடந்த 2020-இல் முழு தொடரும் முதன்முறையாக நடைபெற்றது. துபையில் 13, ஷாா்ஜாவில் 10, அபுதாபியில் 8 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

செப்.19-இல் முதல் ஆட்டம்:

இதன்படி மீதமுள்ள ஆட்டங்கள் செப். 19-இல் தொடங்குகின்றன. ஆட்ட அட்டவணை விவரம்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com