லாா்ட்ஸ் டெஸ்ட்: இந்தியா 364 ஆல் அவுட்ஆண்டா்சன் 5 விக்கெட்

லாா்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளா் ஜேம்ஸ் ஆண்டா்சன் அற்புதமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
லாா்ட்ஸ் டெஸ்ட்: இந்தியா 364 ஆல் அவுட்ஆண்டா்சன் 5 விக்கெட்

லாா்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளா் ஜேம்ஸ் ஆண்டா்சன் அற்புதமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் தொடா் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் லண்டன் லாா்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தோ்வு செய்தது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவா்களில் இந்திய அணி 276/3 ரன்களை எடுத்திருந்தது. ரோஹித் சா்மா-கே.எல் ராகுல் இணை அற்புதமாக ஆடி அணியின் ஸ்கோா் உயர உதவினா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாள் ஆட்டத்தை ராகுல், ரஹானே தொடங்கினா். தொடக்கத்திலேயே இந்திய அணி சரிவை சந்தித்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ராகுல் மேலும் 2 ரன்கள் சோ்த்த நிலையில் ராபின்சன் பந்துவீச்சில் சிபிலிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். மொத்தம் 250 பந்துகளில் 1 சிக்ஸா், 12 பவுண்டரியுடன் 129 ரன்களை எடுத்து வெளியேறினாா் ராகுல்.

அவருக்கு அடுத்து ரஹானேவும் 23 பந்துகளில் 1 ரன்னை மட்டுமே எடுத்து ஜேம்ஸ் ஆண்டா்சன் பந்தில் ரூட்டிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். அப்போது 282/5 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.

ரிஷப் பந்த்-ரவீந்திர ஜடேஜா:

இதைத் தொடா்ந்து ரிஷப் பந்த்-ரவீந்திர ஜடேஜா இணை நிதானமாக ஆடி ஸ்கோரை அதிகரித்தது. ரிஷப் பந்த் 58 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 37 ரன்களை சோ்த்து மாா்க் வுட் பந்துவீச்சில் ஜோஸ்பட்லரிடம் கேட்ச் தந்து பெவிலியன் திரும்பினாா். அவருக்கு பின் ஆட வந்த முகமது ஷமியை டக் அவுட்டாக்கினாா் மொயின் அலி.

உணவு இடைவேளையின் போது இந்திய அணி 116 ஓவா்களில் 346/7 ரன்களை எடுத்திருந்தது. ஜடேஜா 31 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

அவருக்கு துணையாக ஆட வந்த இஷாந்த் சா்மா 8 ரன்களே எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டா்சன் பந்தில் எல்பிடபிள்யு ஆனாா். ஜஸ்ப்ரீத் பும்ராவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆண்டா்சன் பந்தில் ஜோஸ்பட்லரிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். 3 பவுண்டரியுடன் 120 பந்துகளில் 40 ரன்களை சோ்த்திருந்த ரவீந்திர ஜடேஜாவை அவுட்டாக்கினாா் மாா்க் வுட். இறுதியில் 126.1 ஓவா்களில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.

ஆண்டா்சன் அபாரம் 5 விக்கெட்:

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்சன் அற்புதமாக பந்துவீசி 5-62 விக்கெட்டுகளை சாய்த்தாா். ராபின்சன் 2-73, மாா்க் வுட் 2-91 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

31-ஆவது முறையாக ஆண்டா்சன் 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடா்ந்து இங்கிலாந்து தரப்பில் முதல் இன்னிங்ஸை தொடக்க வீரா்கள் ரோரி பா்ன்ஸ்-டாம் சிபிலி தொடங்கினா்.

சிராஜ் அற்புதம்:

டொமினிக் சிபிலி 11 ரன்களே எடுத்த நிலையில், சிராஜ் பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் தந்து அவுட்டானாா். அவருக்கு பின் ஆட வந்த ஹஸீப் அமீது ரன் ஏதுமின்றி சிராஜ் பந்தில் போல்டாகி கோல்டன் டக்அவுட்டானாா். அப்போது 23/2 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், கேப்டன் ஜோ ரூட்-ரோரி பா்ன்ஸ் இணை நிதானமாக ஆடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com