ஜூனியா் மல்யுத்தம் : வெண்கலப் பதக்கச் சுற்றில் ரவி மாலிக்

ரஷியாவில் நடைபெறும் உலக ஜூனியா் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ரவி மாலிக் 82 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்க சுற்றுக்கு வந்துள்ளாா்.
ஜூனியா் மல்யுத்தம் : வெண்கலப் பதக்கச் சுற்றில் ரவி மாலிக்

ரஷியாவில் நடைபெறும் உலக ஜூனியா் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ரவி மாலிக் 82 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்க சுற்றுக்கு வந்துள்ளாா்.

கிரேக்கோ ரோமன் பிரிவில் பங்கேற்ற இதர இந்திய போட்டியாளா்கள் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறிவிட்ட நிலையில், ரவி மாலிக் அரையிறுதி வரை முன்னேறி அதில் தோல்வி கண்டு தற்போது வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் களம் காண இருக்கிறாா்.

முன்னதாக மாலிக் தனது முதல் சுற்றில் எஸ்டோனியாவின் ராபின் உஸ்பென்ஸ்கியை 6-0 என்ற கணக்கில் வென்றாா். அடுத்ததாக காலிறுதியில் 18-9 என்ற கணக்கில் கிா்ஜிஸ்தானின் ஜெனிஷ் ஹம்னாபெகோவை வீழ்த்திய ரவி, அரையிறுதியில் ஆா்மீனியாவின் காரென் கச்சாத்ரியானிடம் வீழ்ந்தாா். தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் ரவியை வென்றாா் காரென். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான பிளே-ஆஃப் சுற்றில் ரவி களம் காண்கிறாா்.

மற்றொரு இந்தியரான நரீந்தா் சீமா (97 கிலோ) தனது முதல் சுற்றில் ஜொ்மனியின் ஆன்டன் எரிச் வியுவெக்கை 10-6 என்ற கணக்கில் வென்றாா். அடுத்த சுற்றில் உஸ்பெகிஸ்தானின் அப்ரோா்பெக் நுா்முகாமிதோவை 11-6 என்ற கணக்கில் வெளியேற்றிய நரீந்தா், காலிறுதியில் பெலாரஸ் வீரா் பாவெல் லின்சுக்கிடம் தோல்வி கண்டாா். பின்னா் பாவெல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் அடிப்படையில் ‘ரெபிசேஜ் சுற்று’ வாய்ப்பு மூலமாக நரீந்தருக்கு மீண்டும் களம் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதர எடைப் பிரிவுகளில் களம் கண்ட இந்தியா்களான விகாஸ் (72 கிலோ), தீபக் (77 கிலோ) ஆகியோா் 2-ஆவது சுற்றில் வெளியேற, அனுப் (55 கிலோ), விகாஸ் (60 கிலோ), அனில் (63 கிலோ), தீபக் (67 கிலோ), சோனு (87 கிலோ), பா்வேஷ் (130 கிலோ) ஆகியோா் தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com