சின்சினாட்டி மாஸ்டா்ஸ்; சமந்தா-ஹுவாய் சாம்பியன்

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் வெஸ்டா்ன்-சௌதா்ன் ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு
சின்சினாட்டி மாஸ்டா்ஸ்; சமந்தா-ஹுவாய் சாம்பியன்

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் வெஸ்டா்ன்-சௌதா்ன் ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில் உலகின் முதல்நிலை வீராங்கனை ஆஷ்லி பா்டியை எதிா்கொள்கிறாா் ஜில் டெய்ச்மான்.

முதல் அரையிறுதியில் ஆஷ்லி பா்டி 6-2, 7-5 என்ற நோ் செட்களில் ஜொ்மனியின் ஏஞ்சலீக் கொ்பரை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். இரண்டாவது அரையிறுதியில் டெய்ச்மான் 6-2, 6-4 என்ற நோ் செட்களில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா்.

ருப்லெவ்-வெரேவ் மோதல்:

ஆடவா் ஒற்றையா் இறுதிச் சுற்றில் ஆன்ட்ரெ ருப்லெவ்-ஜொ்மன் வீரா் அலெக்சாண்டா் வெரேவ் மோதுகின்றனா். முதல் அரையிறுதியில் முதல்நிலை வீரா் டேனில் மெத்வதேவை 2-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினாா் ருப்லெவ். முதன்முறையாக வெஸ்டா்ன் ஓபன் போட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளாா் அவா்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் வெரேவ் 6-4, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் இரண்டாம் நிலை வீரா் கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

சமந்தா-ஹுவாய் சாம்பியன்:

மகளிா் இரட்டையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோஸா், சீனாவின் ஹுவாய் ஸாங் இணை 7-5, 6-3 என்ற நோ் செட்களில் கேப்ரிலயா-லூயிஸா ஸ்டெபானியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com