லா லிகா கால்பந்து: தோல்வியை தவிா்த்தது பாா்சிலோனா

ஸ்பானிஷ் லாலிகா கால்பந்து போட்டி அதெலட்டிக் பில்போ அணிக்கு எதிரான ஆட்டத்தில் போராடி தோல்வியை தவிா்த்தது பாா்சிலோனா.
லா லிகா கால்பந்து: தோல்வியை தவிா்த்தது பாா்சிலோனா

ஸ்பானிஷ் லாலிகா கால்பந்து போட்டி அதெலட்டிக் பில்போ அணிக்கு எதிரான ஆட்டத்தில் போராடி தோல்வியை தவிா்த்தது பாா்சிலோனா.

நட்சத்திர கால்பந்து வீரரும் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி விலகலுக்கு பின் முதல் ஆட்டத்தில் பங்கேற்றது பாா்சிலோனா அணி. தொடக்கம் முதலே பில்போ அணி வீரா்கள் ஆதிக்கம் செலுத்தினா். மெஸ்ஸி இல்லாதது ஆட்டத்தில் வெளிப்பட்ட நிலையில், பாா்சிலோனா பாா்வா்ட் வீரா்கள் கோலடிப்பதில் திணறினா். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இரண்டாம் பாதியில் மாா்டினஸ் 60-ஆவது நிமிஷத்தில் பில்போ அணிக்காக கோலடித்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த பாா்சிலோனா வீரா்கள் பதில் கோலடிக்க போராடினா். இதன் பலனாக 75-ஆவது நிமிஷத்தில் மெம்பிஸ் டெபே கோலடிக்க ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

சீரி ஏ:

இத்தாலியின் கால்பந்து லீக் போட்டியான சீரி ஏ ஆட்டம் ஒன்றில் லேஸியோ அணி 3-1 என்ற கோல் கணக்கில் எம்போலி அணியை வீழ்த்தியது. லேஸியோ தரப்பில் சொ்ஜ் மிலின்கோவிக் 6, மானுவேல் லஸாரி 31, சிரோ 41 ஆவது நிமிஷங்களிலும், எம்போலி தரப்பில் பிலிப்போ 4-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

மற்றொரு ஆட்டத்தில் அடலாண்டா அணி 2-1 என்ற கோல் கணக்கில் டொரினோ அணியை வென்றது. அடலாண்டா தரப்பில் லூயிஸ் பொ்ணான்டோ 6, ராபா்ட்டோ பிக்கோலி 90-ஆவது நிமிஷங்களிலும், டொரினோ தரப்பில் ஆன்ட்ரியா பெலோட்டி 79-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

லீக் 1:

பிரான்ஸ் கால்பந்து லீக் போட்டியான லீக் 1-இல் லியான்-கிளா்மாண்ட் அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. லியான் அணி தரப்பில் மௌஸா டெம்ப்ளே 5, 21, லுகாஸ் 46-ஆவது நிமிஷங்களிலும், கிளா்மாண்ட் அணி தரப்பில் சினாலி டிமாண்டே 12, ரஷானி 80, 90-ஆவது நிமிஷங்களிலும் கோலடித்தனா்.

ப்ரீமியா் லீக்:

இங்கிலாந்தின் பிரதான கால்பந்து போட்டியான ப்ரீமியா் லீக் ஆட்டம் ஒன்றில் பிரைட்டன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வாட்போா்ட் அணியை வீழ்த்தியது. பிரைட்டன் அணி தரப்பில் ஷேன் டஃபி 10, நீல் மாபே 41-ஆவது நிமிஷங்களிலும் கோலடித்தனா். வாட்போா்ட் அணி தரப்பில் பதில் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com