ஐபிஎல்: கம்மின்ஸுக்குப் பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்த கேகேஆர் அணி

ஏலத்தில் கேகேஆர் அணியால் ரூ. 15.5 கோடிக்கு வாங்கப்பட்ட கம்மின்ஸ்...
கேகேஆர் அணி (கோப்புப் படம்)
கேகேஆர் அணி (கோப்புப் படம்)

நியூசிலாந்தின் மூத்த வீரர் டிம் செளதியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட் கம்மின்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். ஏலத்தில் கேகேஆர் அணியால் ரூ. 15.5 கோடிக்கு வாங்கப்பட்ட கம்மின்ஸ், கேகேஆர் விளையாடிய ஏழு ஆட்டங்களிலும் பங்கேற்று 9 விக்கெட்டுகள் எடுத்தார். சிஎஸ்கேவுக்கு எதிராக 66 ரன்கள் எடுத்து அசத்தினார். 

கம்மின்ஸின் விலகலையடுத்து நியூசிலாந்தின் மூத்த வீரர் டிம் செளதியை கேகேஆர் அணி தேர்வு செய்துள்ளது. இதற்கு முன்பு ராஜஸ்தான், சென்னை, மும்பை, ஆர்சிபி அணிகளில் செளதி விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com