சர்வதேச டி20யில் முதல்முறையாக ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்திய வீராங்கனை

சர்வதேச டி20-யில் ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் ஏழு விக்கெட்டுகளை இதற்கு முன்பு யாரும் எடுத்ததில்லை. 
சர்வதேச டி20யில் முதல்முறையாக ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்திய வீராங்கனை

நெதர்லாந்து மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெடெரிக் சர்வதேச டி20 ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகள் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

டி20 ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்கு 4 ஓவர்களே வழங்கப்படுவதால் அதில் அதிக விக்கெட்டுகளை எடுப்பது சிரமம். நேபாளத்தைச் சேர்ந்த அஞ்சலி சந்த், மாலத்தீவுகள் அணிக்கு எதிராக 2019-ல் ஒரு ரன்னும் கொடுக்காமல் ஆறு விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

இந்நிலையில் நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர்  பிரெடெரிக். ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச டி20-யில் ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் ஏழு விக்கெட்டுகளை இதற்கு முன்பு யாரும் எடுத்ததில்லை. ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் தீபக் சஹார், 2019-ல் வங்கதேசத்துக்கு எதிராக ஏழு ரன்கள் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை ஐரோப்பிய தகுதிச்சுற்று ஆட்டம் நெதர்லாந்து - பிரான்ஸ் அணிகளுக்கிடையே ஸ்பெயினில் நடைபெற்றது. முதலில் விளையாடிய பிரான்ஸ் அணி 17.5 ஓவர்களில் 33 ரன்களுக்குச் சுருண்டது. நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரெடெரிக் 3 ரன்கள் மட்டும் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு மெயிடன் ஓவர்களை வீசினார். ஆறு வீராங்கனைகளை போல்ட் செய்து அசத்தினார். இதன்பிறகு விளையாடிய நெதர்லாந்து அணி, 3.4 ஓவர்களில் இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com