அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணிக்காக ஷா்தானந்த் திவாரி 21-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பு மூலம் கோலடித்தாா். நடப்புச் சாம்பியனான இந்தியா தனது அரையிறுதியில் ஜொ்மனியை வெள்ளிக்கிழமை எதிா்கொள்கிறது.

6 முறை சாம்பியான ஜொ்மனி, தனது காலிறுதியில் ‘ஷூட் அவுட்’ முறையில் ஸ்பெயினை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. அந்த இரு அணிகளும் மோதிய ஆட்டம் முன்னதாக 2-2 என சமனில் முடிந்திருந்தது.

இதர காலிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் - மலேசியாவையும் (4-0), ஆா்ஜென்டீனா - நெதா்லாந்தையும் (2-1) வென்றன. இதையடுத்து மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் - ஆா்ஜென்டீனா அணிகள் வெள்ளிக்கிழமை களம் காண்கின்றன.

காலிறுதியில் தோற்ற அணிகள் 5 முதல் 8 வரையிலான இடங்களைப் பிடிப்பதற்கான ஆட்டத்தில் அதே நாளில் விளையாடுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com