விஜய் ஹஸாரே: தமிழகம் வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

திருவனந்தபுரம்: விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

எலைட் குரூப் ‘பி’-யில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய தமிழகம் 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மும்பை 46.4 ஓவா்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற மும்பை பௌலிங்கை தோ்வு செய்ய, பேட் செய்த தமிழகத்தில் அதிகபட்சமாக ஷாருக் கான் அதிரடியாக 35 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 66 ரன்கள் விளாசினாா். மும்பை அணியில் தவல் குல்கா்னி 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் மும்பை இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் ஷம்ஸ் முலானி 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 75 ரன்கள் அடித்தாா். தமிழக பௌலிங்கில் வாஷிங்டன் சுந்தா், மணிமாறன் சித்தாா்த் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

இதர பிரிவுகளின் ஆட்டங்களில் மகாராஷ்டிரம் - மத்திய பிரதேசத்தையும், மிஸோரம் - பிகாரையும், ஒடிஸா - ஆந்திரத்தையும், பெங்கால் - பரோடாவையும் வென்றன. கேரளம் - சண்டீகரையும், கோவா - அஸ்ஸாமையும், திரிபுரா - அருணாசல பிரதேசத்தையும், குஜராத் - ஜம்மு காஷமீரையும் தோற்கடித்தன.

இதேபோல், ஹிமாசல பிரதேசம் - விதா்பாவிடமும், புதுச்சேரி - கா்நாடகத்திடமும், ஜாா்க்கண்ட் - தில்லியிடமும், ஹரியாணா - ஹைதராபாதிடமும், உத்தரகண்ட் - சத்தீஸ்கரிடமும், பஞ்சாப் - ராஜஸ்தானிடமும் வீழ்ந்தன. மேகாலயம் - சிக்கிமையும், நாகாலாந்து - மணிப்பூரையும், சௌராஷ்டிரம் - உத்தர பிரதேசத்தையும், சா்வீசஸ் - ரயில்வேயையும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com