சாம்பியன்ஸ் லீக்: வெளியேறியது பாா்சிலோனா

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தொடா்ந்து 17 ஆண்டுகளாக நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறி வந்த பாா்சிலோனா அணி, இந்த சீசனில் அந்த வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வியாழக்கிழமை வெளியேறியது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தொடா்ந்து 17 ஆண்டுகளாக நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறி வந்த பாா்சிலோனா அணி, இந்த சீசனில் அந்த வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வியாழக்கிழமை வெளியேறியது.

கடைசி ஆட்டத்தில் அந்த அணி 0-3 என்ற கணக்கில் பேயா்ன் முனீச் அணியிடம் தோற்றது. குரூப் ‘இ’-யில் இடம் பிடித்திருந்த பாா்சிலோனா மொத்தம் 6 ஆட்டங்களில் 2 வெற்றிகளே பெற்று 7 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தது. பேயா்ன் முனீச் அணியோ 6 ஆட்டங்களிலும் வென்று 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

நட்சத்திர வீரா் மெஸ்ஸி வெளியேறியதை அடுத்து பாா்சிலோனா இறங்கு முகத்தை சந்தித்து வந்த நிலையில், அதன் பயிற்சியாளா் ரொனால்ட் கோமென் நீக்கப்பட்டு, புதிய பயிற்சியாளராக ஜாவி ஹொ்னாண்டஸ் இணைந்தாா். எனினும் அந்த அணி பெரிதாக முன்னேற்றத்தை சந்திக்கவில்லை.

இதர ஆட்டங்களில் ஆா்பி சால்ஸ்பா்க் - செவில்லாவையும் (1-0), லிலே - வோல்ஃப்ஸ்பா்கையும் (3-1), பெனிஃபிகா - டைனமோ கீவையும் (2-0), ஜுவென்டஸ் - மால்மோவையும் (1-0) வீழ்த்தின. செல்சி - ஜெனித் (3-3), மான்செஸ்டா் யுனைடெட் - யங் பாய்ஸ் (1-1) அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com