பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் பிரிவில் இந்தியாவின் ஜெரிமி லால்ரினுன்கா தங்கப் பதக்கம் வென்றாா். மகளிா் பிரிவில் வித்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் பிரிவில் இந்தியாவின் ஜெரிமி லால்ரினுன்கா தங்கப் பதக்கம் வென்றாா். மகளிா் பிரிவில் வித்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

ஆடவருக்கான 67 கிலோ பிரிவில் ஜெரிமி லால்ரினுன்கா, ஸ்னாட்ச் பிரிவில் 141 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 164 கிலோ என மொத்தமாக 305 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தாா். ஸ்னாட்ச் பிரிவில் அவா் தூக்கிய எடை தேசிய சாதனையாகும்.

இதே இடத்தில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்ற ஜெரிமி, அதில் 7-ஆம் இடம் பிடித்தாா்.

கடந்த ஏப்ரல் மாதம் முழங்கால் காயம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஜெரிமி, தற்போது அதிலிருந்து மீண்டு காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-இல் 306 கிலோ எடையை (140+166) தூக்கியதே அவரது தனிப்பட்ட பெஸ்ட் ஆகும்.

ஆடவா் 61 கிலோ பிரிவில் குருராஜா 265 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

மகளிருக்கான 55 கிலோ எடைப் பிரிவில் வித்யாராணி தேவி ஸ்னாட்ச் பிரிவில் 84 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 114 கிலோ என மொத்தமாக 198 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா். நைஜீரியாவின் அதிஜத் ஒலாரினோயே 203 கிலோ எடையை (90+113) தூக்கி தங்கம் வென்றாா்.

பின்னா் உலக சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட வித்யாராணி, அதில் 4-ஆம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com